web counter

உதவாக்கரை
ஜெயின் சாம்பார் ( ?????, ???? 17, 2006 )


முன்னுரை: மானுடவியலின் கருப்பொருளாம் மனிதவாழ்க்கையில் உய்யும் வழி பொருட்டு உட்கொள்ளும் உணவிலொரு பகுதியான சாம்பார் பற்றியதொரு அரிய தகவலைத் தரும் பொருட்டே இக்கட்டுரை வரையப்படுகிறது.

அறிமுகம்


  • அறிமுகம்: இரத்தினா கஃபே

    திருவல்லிக்கேணித் துறையில் அமைந்ததொரு அரும்பெரும் பழைமையான உணவகம் இரத்தினா கஃபே. இம்மாநகர்ச் சாம்ராஜ்யத்தினிடை அமைந்த சுற்றிலுமுள்ள பதினெட்டுப்பட்டியில் அடக்கமாவன திருமைலை, ஆழ்வார்ப்பேட்டைத் திருநகரம், இராயப்பேட்டை மற்றும் அதனின்று வெளிப்புறமுடைய அண்ணா சாலை, அன்றியும் பட்டினப்பாக்கமும் ஆகும்.

    இட்டிலியும் தோசையும் பரோட்டா சப்பாத்தியும் பரிமாறி புகழடைந்த உணவகங்களினூடே, இரத்தினா கஃபேயோ மசால் தோசை மட்டுமின்றி சாம்பார் ருசியால் புகழுச்சியில் இருக்கிறது. பரிமாறுபவர்கள் சாம்பார்ப்பாத்திரத்துடனேயே வந்து கேட்பர், 'என்ன வேண்டும்?' என்று. இரண்டு இட்லிகள் தேவையென்று வாங்கினாலும் இரண்டாயிரம் நாட்களுக்குத் தேவையான சாம்பார் கிடைக்கும். இட்டிலியை மட்டுமின்றி நம்மையும் விரும்பினால் சாம்பாரிலேயே குளிப்பாட்டி திருப்தியுறச்செய்யும் புகழுடைத்து இரத்தினா கஃபே. இப்படி சாம்பாரில் ஊறித் திளைத்த இட்டிலியையே ஔவையாரும் 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்று பாடியுள்ளார்ப் போலும். அதாவது காசு இல்லாமல் இப்படிப்பட்ட இட்டிலியை கசக்கிக் கலந்து கட்டி உண்ட தருணத்தில், நம் உடை கந்தலாகிவிடும்படி தண்டப்பிரயோகம் நிகழ வாய்ப்புண்டு. அப்படியே இருந்தாலும் இது போன்ற சாம்பார் இட்டிலியை விடக்கூடாது என்கிறார் ஔவையார்.

    இத்திருவல்லிக்கேணியில் அமைந்த இரத்தினா கஃபேயில் புதிதாகக் கிடைக்கும் 'ஜெயின் சாம்பார்' ஒன்றே கருத்தைக் கவரும் பண்டமாவதால் திருவல்லிக்கேணித் திருத்தலம் அமாவாசைக்குத் தோதான இடமாக அமைகிறது. மேலும் சுற்றிலுமுள்ள பதினெட்டுப்பட்டி குறுநகர மக்களுக்கும் அமாவாசையன்று புழங்க வழிவகுத்து ஒரு சுற்றுலாத் தளமாகவும் ஏதுவாக்க இடமளிக்கிறது.


  • அறிமுகம்: அமாவாசை

    இரவதனில் இரவியில்லாமல் நிலவு காண்பது பாமரரும் காணும் நிகழ்வு. இரவியதனை பூமித்தாயவள் கண்டுதினம் இரசிக்க, நிலவு குறுக்கிடும் அந்த தினத்தில் ஒளியிழக்கிறது நிலவு. அத்தினமே அமாவாசையென்று அறியப்படுத்துகிறது மாயக்கண்ணாடி.


  • அமாவாசைக்கும் இரத்தினா கஃபேயருக்குமான சம்பந்தம்
    தாயோ தந்தையோ இழந்தவர்கள் நிலவு ஒளியிழக்கும் இத்திருநாளில் வெங்காயமோ வெள்ளைப்பூண்டோ உண்பதில்லை தர்ப்பணம் முடித்தவுடன். இல்லத்திலே இருந்தாலோ இல்லாலோ வேறாளோ ஆக்கிப்போடுவர் உப்பிட்டு வெங்காயமற்ற உணவதனை. உண்டு நாமும் களித்து உறங்காமல் விழித்திருப்போம் இரவுவரை. ஆனால் பணியகம் செல்பவரோ, தொடர்ந்து உணவகத்திலேயே உண்டு கெட்டவரோ அறியாது திகைத்துத்தான் போக நேரும் இத்திருநாளில். நூதனமதிநுட்பமுடையவரோ, வெங்காயம் மட்டுமே ஒதுக்க தவிர்க்கவேண்டுமென்பதால் இத்திருநாளில் தயிர்சாதமோ, சாம்பாரின்றி வெறும் தோசை இட்டிலியோ மிளகாய்ப்பொடியுடன் உணவகத்திலேயே உண்பர். சப்பென்றிருந்தாலும் வெட்டிஒட்டும் நிரலாக்கப் பணிபோல் சகித்தேதான் சாப்பிடுவர்.

    அக்கவலை இனி வேண்டாம், வந்துவிட்டது ஜெயின் சாம்பார் என்பதே இரத்தினா கஃபே நமக்களிக்கும் ஆறுதற்தகவல். ஜைனர்கள் தவிர்க்கும் ஊண், புலால், வெங்காயம், பூண்டு தவிர்த்து இதர பதார்த்தங்களால் ஆன சுவையான குழம்பே இந்த ஜெய்ன் சாம்பார். இதையே அமாவாசையன்றும், இதர பித்ரு தினங்களிலும் சேர்த்துக்கொள்வது வெங்காயமின்றி சாம்பார் உண்ண வழிவகை செய்யும்.

    இடைச்செருகல்
    முன்னொரு தினத்தில் ஓர் அமாவாசையன்று பெங்களூர் செல்கையிலே, நண்பர்களுடன் 'ஃபோரம்' எனும் இடம் சென்றிருந்தேன். என்ன உண்பது என்று தவிக்கையிலே, வெங்காயம் தவிர்த்த 'ஜெய்ன் பேல் பூரி' கிடைக்க அதையே மூன்று தட்டுக்கள் உண்டு மகிழ்ந்தது உண்டு.

    முடிவுரை

    அமாவாசை மட்டுமின்றி, திவசம், சித்திரை மாதப்பிறப்பு மற்றும் ஏனைய தர்ப்பண தினங்களிலும் தவித்துக்கொண்டு அரைகுறை உணவு உண்ணும் நிலை இனி மானிடருக்கில்லை. உணவை முழு உணவாக்க சாம்பாரும் சேர்க்கலாம் இரத்தினா கஃபே செல்லும் கணம். ரத்தினா கஃபே, இது ரத்தின கஃபே. ஜெய்ன் சாம்பார், இதுவே ஜெய்க்கும் சாம்பார்.



    13 dharma adigal

    சே, ஜெ.யின் சாம்பர் என்று படித்தேன்
    4/17/2006 12:35:43 PM      ramachandranusha     Email   


    //ஜைனர்கள் தவிர்க்கும் ஊண், புலால், வெங்காயம், பூண்டு தவிர்த்து இதர பதார்த்தங்களால் ஆன சுவையான குழம்பே இந்த ஜெய்ன் சாம்பார்.//

    கண்ணா வெங்காயம் தவிர்த்த சாம்பாரா? அரைத்து விட்ட வெங்காய சாம்பாரெங்கே?நீர் கூறும் ஜெயின் சாம்பாரெங்கே?

    சமீபத்துல ஒரு பார்ட்டியில ஜெயின் பார்ட்டி வர அவாளுக்கு என்னால் கொடுக்க முடிந்த ஒரே பதார்த்தம் "குடிநீர்" மட்டுமே... பாவம்ங்ணா.

    4/17/2006 1:05:44 PM      குசும்பன்     Email    Home Page


    இரத்தினா கபே இப்பொழுது தி.நகரிலும் உள்ளது. ஒரு நண்பர் என்னை அழைத்துச் சென்று சாம்பாராட்டினார்.
    4/17/2006 1:23:32 PM      கோ.இராகவன்     Email    Home Page


    >>>>இரவியதனை பூமித்தாயவள் கண்டுதினம் இரசிக்க, நிலவு குறுக்கிடும் அந்த தினத்தில் ஒளியிழக்கிறது நிலவு.<<<<



    சூப்பர்!


    4/17/2006 1:25:37 PM      .:dYNo:.     Email   


    குசும்பன், அப்போ அவங்களுக்கு 'தண்ணி காட்டிட்டீங்க'ன்னு சொல்லுங்க. ;-) ஆனா நீங்க சொல்றது செம காமடியா இருக்கு. இந்த நேரத்துல நான் வேற தனியா சிரிக்கக் கூடாது.

    உஷா, ஜெ.ன்னு யாரை சொல்றீங்க? ஜேயகாந்தனா ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தியா?

    4/17/2006 1:25:48 PM      S Krupa Shankar     Email    Home Page


    கோ. ராகவன், தி.நகரில் இரத்தினா கபேயா? எங்கே இருக்கிறது? எனக்கும் அறிமுகப்படுத்தினால் மகிழ்ச்சியடைவேன். அதைவிட சாம்பாராட்டின அந்த நண்பரை அறிமுகப்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சியடைவேன். ;-) சாம்பாராட்டினார்... என்ன ஒரு சொற்ப்ரயோகம். :-)

    டைனோ, தண்ணீ (நன்றியை விட இது விலை மதிப்பு அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை).

    4/17/2006 1:30:32 PM      S Krupa Shankar     Email    Home Page


    //ஜைனர்கள் தவிர்க்கும் ஊண், புலால், வெங்காயம், பூண்டு தவிர்த்து இதர பதார்த்தங்களால் ஆன சுவையான குழம்பே இந்த ஜெய்ன் சாம்பார்.//

    கண்ணா வெங்காயம் தவிர்த்த சாம்பாரா? அரைத்து விட்ட வெங்காய சாம்பாரெங்கே?நீர் கூறும் ஜெயின் சாம்பாரெங்கே?

    சமீபத்துல ஒரு பார்ட்டியில ஜெயின் பார்ட்டி வர அவாளுக்கு என்னால் கொடுக்க முடிந்த ஒரே பதார்த்தம் "குடிநீர்" மட்டுமே... பாவம்ங்ணா.

    4/17/2006 4:34:51 PM      குசும்பன்     Email    Home Page


    வாப்பா கண்ணா, ஃபோரம் தனிலே ஜெயின் சாம்பார் கிடைத்த திருக்கடையின் பெயரெதுவோ?
    4/18/2006 5:54:05 AM      மீனாக்ஸ்    


    ஸாரி, ஜெயின் பேல் பூரி
    4/18/2006 5:54:58 AM      மீனாக்ஸ்    


    தம்பி, இது எலிக்சன் டைமுபா :-)
    4/18/2006 10:38:49 AM      Ramachandranusha     Email   


    தல, நீ தி.நகர் ரத்னா கஃபே போகணுமா? செரி, நீ என்னா பண்றே உன் வண்டிய எடுக்கறே, எல்டாம்ஸ் ரோடு நேரா வந்து தேனாம்பேட் சிக்னல் தொட்டு ஜ்ரூரா நேரா வந்தா பனகல் பார்க் வரும். வந்திச்சா. இப்ப, லொட்டையில திரும்பி அதாம்பா லெப்ட்டு, வெங்கட் நாராயணா ரோடு புடி. புடிச்சியா. அப்படியே போ. நைனா, திருப்பதி பாலாஜி கோயில் தேவஸ்தானம் வரும், ஒரு கோவிந்தா பொட்டு அதுக்கு பக்கத்துல புச்சா ஒரு பில்டிங் இருக்கும். அங்கதான்னா கீது நம்ம சாம்பாராலயம். காரியாலயம் போக மத்த நேரமெல்லாம், இப்ப நான் சாம்ப்பாரலாயம் தான். இன்னாத்துக்கு கஷ்டப்படற்றே, ஒரு போனடி தொரை வந்து கூட்டியாறேன்.
    4/18/2006 10:59:26 AM      நாராயணன்     Email    Home Page


    மதுரை மீ இளவரசே,

    அத்திருக்கடையின் பெயர் நினைவில்லை. ஓர் ஈசான்ய மூலையில் இருக்கைகளிட்டு இருந்தது மட்டும்தான் தெரியும். பசிக்கு பேல் பூரி கிடைத்த மகிழ்ச்சியில் கடையின் பெயரையும் பார்க்கவில்லை, கடையில் பில்லையும் பார்க்கவில்லை.

    நாராயணன்,

    வரைபடம் குடுக்காத ஒரே ஒரு குறைதான். எழுத்துலயே வரைஞ்சு காட்டறதுன்னா இப்படிதானா? கலக்கிட்டீங்க போங்க. இந்த சனிக்கிழமை போய் ஒரு புடி புடிச்சுடறேன். பிள்ளைத் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. :-)) லெப்ட்டு என்ன லெப்ட்டு, லொட்டைங்கற செந்தமிழ்ச்சொல்லே தெளிவா புரிஞ்சுதே!!! ஆமாம், நீங்கதான் கோ. ராகவனை அழைத்துக்கொண்டு போன நண்பரா?

    4/19/2006 2:17:51 PM      S Krupa Shankar     Email    Home Page


    இது வரை போட்ட அத்தனை பதிவுகளையும் ஒன்னு விடாம படிச்சிட்டேன்.. அடுத்தது எப்போ? தலைவரோட கல்யாணத்துக்கு அப்புறமா..
    4/22/2006 7:42:25 AM      Anitha     Email   


    ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
    ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

    ஷை ஷௌ
    (ஷௌஷ Ӹஷௌஷௌ):
    ஷௌஷௌ:
    Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
    ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)