web counter

உதவாக்கரை
மினி எம்பி3 ப்ளேயர் (இது அரசியல் எம்பி இல்லைங்க) ( Ҿ?, ???? 2, 2006 )

போட்காஸ்டிங் பற்றி பத்ரி எழுதி இருக்கும் பதிவில் mp3 ரெகார்டர் பற்றி எழுதி இருந்தார் (சுட்டி). நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் நானும் ஒரு mp3 ப்ளேயர் வாங்கினேன். ஆமாம், என்னிடம் கருத்து எல்லாம் சொல்லும் அளவுக்கு இப்பொழுதைக்கு யாரும் என்னை மதிக்காததால், என்னைப் பொருத்தவரை அது பாட்டுக்களைக் கேட்கும் ஒரு மினி டிஜிட்டல் ப்ளேயர் மட்டும்தான். தினமும் இரண்டு மூன்று மணி நேரம் பயண நேரத்தில் விரயமாவதால், அந்த நேரத்தில் திரைப்படப் பாடல்கள் கேட்டால் போகிற வழிக்காவது புண்ணியம் கிட்டுமே என்று mp3 ப்ளேயர் வாங்கினேன்.

ஐந்து சிங்கங்களின் தலைகள் போட்ட டாலர்கள் இன்னமும் இந்தியாவில் அரசாங்க கரன்சியாகப் புழக்கத்துக்கு வராததால், எனக்கும் டாலர்களில் சம்பாதிக்க விருப்பமே இல்லை. அதனால் ரூபாயிலேயே சிவாவிஷ்ணு கோவில் பக்கத்தில் ஒரு சின்ன எலக்ட்ரிகல்சில் லோக்கல் brand எம்.பி.3 ப்ளேயர் ஒன்றையே வாங்கிவிட்டேன். 256 MB, mp3 player, FM, recorder எல்லாம் இவ்வளவு மலிவாக ரூ. 1800க்கு (?!) வாங்கிவிட்டேனே என்று சந்தோஷப்பட்டாலும் கைக்கு முதுகு எட்டவில்லை.

thumbdrive

வாங்கிய இரவே rediff, ebay எல்லா shopping தளங்களையும் சுற்றி பார்த்ததில் அதே வஸ்து ரூ. 1200, 1300க்கே கிடைப்பது கண்டு சொல்லொனாத் துயருற்றேன். நல்லவேளை, மறுநாள் ரஜினி ராம்கி அதே வஸ்துவை ரூ. 3000 கொடுத்து வாங்கி இருப்பதை அறிந்ததும் ஒருவாறாக ஆசுவாசம் ஏற்பட்டது. தோள் நிம்மதி கொடுப்பான் தோழன்!

அப்புறம் என்ன, கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் ஹெட்ஃபோனும் கையுமாகவே சென்னை நகரப்பேருந்துகளெங்கும் திரிந்தேன். இரவு வீட்டுக்கு வந்தால் டேட்டா கேபிள் வழியாக ஒரு பதினைந்து இருபது பாட்டுக்களைப் பதிவிறக்குவது, காலை மாலை பாட்டுக்களைக் கேட்பது என்று உல்லாசமாகத்தான் ஆரம்பத்தில் பொழுது போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் ப்ளேயரை on செய்தவுடன் தானாகவே ஷட் டௌன் ஆகியது. சரி, கை தவறுதலாக நான் தான் ஷட்டௌன் பண்ணியிருப்பேன் என்று நினைத்து மீண்டும் on செய்தால், ம்ஹூம்... மீண்டும் ஷட் டௌன். பிறகு எவ்வளவு முயன்றும் பயனில்லை. எம்.பி.3 ப்ளேயர் என்று சொல்லி வாங்கிய thumb driveஐ ஃபார்மட் செய்து பார்த்தேன். அப்பொழுதும் ஒன்றும் கதைக்கே ஆகவில்லை.

வாங்கிய கடையிலேயே எம்.பி.3 ப்ளேயரைக் கொண்டு காட்டினால் கடைக்காரர் இரண்டு முறை இயக்கிப் பார்த்துவிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் ஃபனால் ஃபனால் ஆக்கினார். பின்னே, இது போன்ற பொருட்களுக்கு உத்தரவாத அட்டை, சட்டை, வேஷ்டி ஒன்றும் கிடையாது. பொருள் நன்றாக உழைத்தால் லாபம், பழுதானால் நம்பிக்கை தளராமல் வேறொன்று புதிதாக நம்பி (?!) வாங்கி அதுவாவது பழுதாகாமல் இருக்கிறதா என்று சோதிக்கத்தான் முடியும்.

ஒரு இரண்டு மூன்று நாள் கழித்து எம்.பி.3 ப்ளேயருடனுறை manual சமேத குறுவட்டை ஆராய ஆரம்பித்தேன். குறுவட்டு என்றால் பாதுஷா அளவுதான் இருந்தது. பாதுஷாவை கணிப்பொறியின் வாயில் திணித்துப் பார்த்ததில் தாய் மொழியில் என்னென்னவோ கோப்புக்கள், அடைவுகள் (ஃபோல்டர்) இருந்தன. தாய் மொழி என்றால் என்னுடைய தாய்மொழியில் இல்லை, தாய்லாந்துக்காரர்களின் தாய் மொழி. சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. பிறகு ஒவ்வொரு ஃபோல்டரினுள்ளூம் exe என்று முடியும் ஃபைல்கள் ஒவ்வொன்றாக க்ளிக் பண்ணியதும் அது அகப்பட்டது... Thumbdrive Utility. நல்லவேளையாக பாதுஷா ஏமாற்றவில்லை. அந்த யுட்டிலிட்டியை கணிப்பொறியில் நிறுவி அதன் வழியாக thumb driveஐ ஃபார்மட் பண்ணியதும் நல்லபடியாக எல்லாம் நடந்தேறியது. பிறகு தினமும் இரவு பதிவிறக்கம், காலை மாலை பாடல்கள், பேருந்து, பாடல்கள், இரவு பதிவிறக்கம்...

ஒலிப்பதிவு தொடர்ச்சியாக செய்து பார்த்ததில்லை. அதனால் பேட்டரி ஆயுசு பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆனால் பாட்டு மட்டும் கேட்டுக்கொண்டிருந்தால் கிட்டத்திட்ட ஒரு வாரத்திற்கு ஒரு பேட்டரி வருகிறது.

சில பாடல்கள் தொடங்கும்போது மட்டும் எம்.பி.3 ப்ளேயர் ஷட் டௌன் ஆகி வெறும் தம்ப் driveஆக மாறிவிடும். அப்படிப்பட்ட பாடல்களை அழித்து விட்டு இருக்கும் மற்ற பாடல்களைக் கேட்டுக்கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையைக் கொஞ்ச காலம் ஓட்டிக்கொண்டிருந்தேன்.

பிறிதொருநாள், இப்படி அடிக்கடி மக்கர் செய்யும் டிஜிட்டல் ப்ளேயர்களுக்கு firmware இணையத்திலிருந்து எடுத்துப் போட்டால் சகல நிவாரணமும் கிடைக்கும் என்ற தகவலை நண்பர் ஒருவரின் வாயிலாக அறிந்தேன். (நான் தொலைதூரக்கல்வியில் பயிலும் முதுநிலை கணிப்பொறியியல் தேர்வு எழுதப்போன விஷயமும், அங்கே பார்த்த நண்பர்தான் இந்த செய்தியைச் சொன்னார் என்பதை இங்கே குறிப்பிட்டால் நான் கணிப்பொறியியல் படிக்கும் சேர்ந்திருக்கும் விஷயம் வெளியில் தெரிந்துவிடும். மேலும், எழுதிய தேர்வின் முடிவையும் யாராவது இன்னும் இரண்டொரு மாதத்தில் கேட்கும் அபாயம் நேரிடும். ஆகையால் தேர்வு, மு.க. பற்றி எதுவும் இங்கே குறிப்பிடவில்லை.)

அப்பாடி, இனிமேல் என்றென்றும் புன்னகை என்று நினைத்துக்கொண்டிருந்தேன்... ஆனால்...

இருங்க இருங்க... நான் என் திருமணத்தைப் பத்தி எல்லாம் இப்போ ஒன்னும் சொல்லல. இது வேற விஷயம்.

ஆனால்... mp3 ப்ளேயரில் joystick இருக்கும் இல்லையா? பாடல்கள், கோப்புகள் என்று எல்லாவற்றையும் பராமரிக்க, மௌஸ் மாதிரி பயன்படும். அது இப்பொழுது சுகமான நிலையில் இல்லை. அதாவது, இப்பொழுது எம்.பி.3 ப்ளேயர் தம்ப் driveஆக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். refill, ஈர்க்குச்சி, slide போன்று ஏதாவது ஒன்றை வைத்துத்தான் பாடல்கள் கேட்க, ஒலிப்பதிய முடியும்.

யாருக்காவது இந்த எம்.பி.3 ப்ளேயர் வேண்டுமா? 100 ரூபாய் கொடுத்தால் போதும். அதாவது, இதை வாங்கிப் பயன்படுத்தும் நல்ல உள்ளத்துக்கு ப்ளேயரை இலவசமாகத் தந்து நூறு ரூபாயும் நான் கொடுத்தால் போதும். :-)



9 dharma adigal

எனக்கு குடுத்துடுப்ப.. 100 பொதும் வாங்இக்கரென்
6/27/2007 7:13:09 AM      ஜீவா     Email    Home Page


----இருங்க இருங்க... நான் என் திருமணத்தைப் பத்தி எல்லாம் இப்போ ஒன்னும் சொல்லல. இது வேற விஷயம்.----

:-)))

8/2/2006 4:38:25 PM      Bala Subra     Email   


:)
வாங்க கிருபா...
வலைப் பக்கங்கள் இன்னும் நினைவில் இருக்கா...
:)

8/2/2006 10:51:01 PM      யெஸ்.பாலபாரதி     Email    Home Page


மலிவாக வாங்கினால் தரம் மலிவாகதான் இருக்கும்.
நான்கூட முன்பு ச்ரெஅடிவெ ம்ப்3 ப்லயெர்(ஷென்,MஉVஒ) பயன்படுத்தினேன்.இப்போழுது ஸொன்ய் ஏரிச்ச்சொன் K750இ செல்போனை ம்ப்3 ப்லயெர்-யாக பயன்படுத்துகிறேன்.இதை விலை ற்M1200(மலேசிய ரிங்கிட்).இந்திய மதிப்பு தெரியவில்லை...

8/3/2006 2:25:28 PM      renga/agner     Email   


தூஈஈதூஈஏதூஈநதூஈஓதூஈததூஈ• தூஈஓதூஈததூஈஙுதூஉதூஈ•தூஈநதூஈ©தூஈததூஈஏதூஉ தூஈ¤தூஈஊதூஈஈதூஉ தூஈஈதூஈஏதூஈநதூஈஓதூஈததூஈ•தூஈ¤தூஈததூஈ©தூஉ தூஈக்ஷதூஈஊதூஉதூஈ•தூஉதூஈ•தூஉதூஈஈதூஉ.
தூஈ¨தூஈததூஈ©தூஉதூஈ•தூஉஸ்ரீதூஈŸ தூஈஈதூஉதூஈ©தூஉதூஈªதூஉ creative mp3 Player(Zen,MuVo) தூஈªதூஈஉதூஈ©தூஉதூஈªதூஈŸதூஉதூஈ¤தூஉதூஈ¤தூஈநதூஈ©தூஉக்ஷதூஈ©தூஉ.தூஈக்ஷதூஈªதூஉதூஈªதூஉஹ்தூஈஒதூஉதூஈ¤தூஉ Sony Ericsson K750i தூஈஞுதூஉஹதூஈஏதூஉதூஈªதூஉஹ்தூஈ©தூஉஜ் mp3 Player-தூஈஉதூஈததூஈ• தூஈªதூஈஉதூஈ©தூஉதூஈªதூஈŸதூஉதூஈ¤தூஉதூஈ¤தூஉதூஈ•தூஈநதூஈஎதூஉக்ஷதூஈ©தூஉ.தூஈக்ஷதூஈ¤தூஉஜ் தூஈஓதூஈநதூஈஏதூஉஜ் RM1200(தூஈஈதூஈஏதூஉக்ஷதூஈஞுதூஈநதூஈஉ தூஈஊதூஈநதூஈஙுதூஉதூஈ•தூஈநதூஈŸதூஉ).தூஈக்ஷதூஈ¨தூஉதூஈ¤தூஈநதூஈஉ தூஈஈதூஈ¤தூஈநதூஈªதூஉதூஈªதூஉ தூஈ¤தூஉஹதூஈஊதூஈநதூஈஉதூஈஓதூஈநதூஈஏதூஉதூஈஏதூஉஜ்...

8/3/2006 2:29:01 PM      renga/agner     Email   


தூஈஹதூஈஙதூஈத.. தூஈஞுதூஈ¨தூஉதூஈ¤தூஉஹ்தூஈஃதூஈஈதூஈத தூஈ•தூஉ€தூஈ¤தூஉ! தூஈ¤தூஉஹ்தூஈஐதூஉ தூஈக்ஷதூஈ©தூஉதூஈ©தூஈததூஈªதூஈத தூஈ’தூஈஊதூஉ தூஈªதூஉஹ்தூஈகதூஉதூஈŸதூஉ தூஈªதூஉஹ்தூஈŸதூஉதூஈŸதூஉ தூஈªதூஈªதூஉதூஈஐதூஈநதூஈஞுதூஈநதூஈŸதூஉதூஈŸதூஉ தூஈ•தூஉதூஈŸதூஉதூஈ¤தூஉதூஈ¤தூஉதூஈஊதூஉதூஈ•தூஉதூஈ•தூஈநதூஈஉதூஉக்ஷ.. தூஈ¤தூஉக்ஷதூஈஙுதூஉதூஈ•தூஉதூஈகதூஉதூஈªதூஈத!

தூஈஉதூஈததூஈஊதூஉதூஈ•தூஉதூஈ•தூஈததூஈஓதூஈ¤தூஉ தூஈŽதூஈஈதூஉ.தூஈªதூஈந 3 தூஈªதூஈநதூஈஐதூஉக்ஷதூஈஉதூஈஊதூஉ தூஈஓதூஉக்ஷதூஈ£தூஉதூஈஈதூஈததூஈஏ? 50 தூஈஊதூஉஸ்ரீதூஈªதூஈததூஈஉதூஉ தூஈ•தூஉஸ்தூஈŸதூஉதூஈ¤தூஉதூஈ¤தூஈத தூஈªதூஉஹ்தூஈஎதூஉதூஈஈதூஉ. தூஈக்ஷதூஈஏதூஈஓதூஈஞுதூஈஈதூஈததூஈ• தூஈ•தூஉஜ்தூஈஞுதூஉதூஈஞுதூஉஹதூஈஏதூஈஓதூஉதூஈ•தூஉதூஈ•தூஉ 10 தூஈªதூஈஊதூஉதூஈகதூஉஹதூஈ£தூஉதூஈŸதூஉ தூஈ¤தூஈஐதூஉதூஈஐதூஉதூஈªதூஈŸதூஈநதூஈஉதூஉதூஈஈதூஉ தூஈஷ்தூஈ£தூஉதூஈŸதூஉ. தூஈக்ஷதூஈ©தூஉதூஈ©தூஉதூஈஈதூஈத தூஈªதூஉதூஈஊதூஈநதூஈஉதூஈஏதூஉஜ்? தூஈ¨தூஈஈதூஉதூஈஈ தூஈ•தூஉக்ஷதூஈஞுதூஉதூஈஈதூஉ தூஈªதூஉஸ்ரீதூஈŸதூஉதூஈŸ தூஈ•தூஉக்ஷதூஈகதூஈத தூஈªதூஉஸ்ரீதூஈŸதூஉதூஈஞுதூஉதூஈªதூஉதூஈªதூஈத!

8/3/2006 2:45:05 PM      "Rajni" Ramki     Email    Home Page


ஆஹா.. சந்தோஷமா கீது! தோள் இன்னாபா ஒரு போஸ்ட் போட்டு பப்ளிசிட்டு குடுத்துருக்கியே.. தேங்க்ஸ்பா!

யாருக்காவது எம்.பி 3 பிளேயர் வேணுமால? 50 ரூபாய் கொடுத்தா போறும். இலவசமாக கைச்செலவுக்கு 10 பர்ஸெண்ட் தள்ளுபடியும் உண்டு. இன்னுமா புரியலை? நம்ம கேசும் பூட்ட கேஸா பூட்சுப்பா!

8/3/2006 2:46:04 PM      220.226.10.98    


ரெங்அ,

நானும் புதிதாக எல்.ஜி. செல்ஃபோன் எம்.பி.3 ப்ளேயருடன் வாங்கி இருக்கிறேன். ஆனால் அதிலிருந்து வரும் ஒலி அவ்வளவு தூரம் காதுக்கு எட்டவில்லை. K750 எப்படி இருக்கிறது?

ராம்கி,

செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி. அளவிடற்கரியா மகிழ்ச்சியுற்றேன். :-)

8/10/2006 3:13:22 AM      Í. ìÕÀ¡ „í¸÷     Email    Home Page


வாழ்க சோனி எரிக்சன் டபிள்யூ 600!
8/27/2006 2:44:14 PM      yagna     Email   


ஷைளிஷ ஷைலாஷ, ஷைழாஷ, ஷௌஷ ஷைவாஷௌ ஷௌஷௌ .....
ஷௌலீஷ ஷௌ?ஷை, ஷை ஷைɧஷை ஷை ஷௌயிஷௌ?

ஷை ஷௌ
(ஷௌஷ Ӹஷௌஷௌ):
ஷௌஷௌ:
Ũஷௌஷௌ/ஷௌஷௌஷ:
ஷௌஷௌ ஷէஷை, ஷௌèஷ! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஷைǨஷை ஷைΦஷைறி
(ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!)

RSS Feed
(ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)

Powered By

(ஷௌஷ ஷௌ...ஷௌ ஷௌ?)